உலக கோப்பையில் கேமராமேன் பிடித்த அசத்தல் கேட்ச்- வைரல் வீடியோ

இங்கிலாந்தில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கேமராமேன் ஒருவர் பிடித்த கேட்ச் இணையத்தில் வைரலாகி உள்ளது.
உலக கோப்பையில் கேமராமேன் பிடித்த அசத்தல் கேட்ச்- வைரல் வீடியோ
Published on

வங்கதேசத்திற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான உலகக்கோப்பை லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வங்கதேசத்திடம் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் மொசாடெக் ஹொசைன் ஓவரில், தென்னாப்பிரிக்க வீரர் டு பிளசிஸ் லாங் ஆன் திசையில் சிக்ஸ் அடித்தார்.
அந்த பந்து கேமராமேன்கள் இருந்த இடத்தில் சென்று விழுந்தது. அப்போது இயான் கிங்டன் என்ற கேமராமேன், தனது இருக்கையில் அமர்ந்து கொண்டே ஒரு கையால் அந்த பந்தை லாவகமாகப் பிடித்தார்.  அவர், மிக சாதாரணமாக அந்த கேட்சை பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

👏 to this multi-talented #CWC19 photographer! pic.twitter.com/r7EiVbwOEt

X

Maalai Malar
www.maalaimalar.com