பிரணாப் முகர்ஜி, வசந்தகுமார் எம்.பி. மறைவுக்கு மக்களவையில் இரங்கல்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வசந்தகுமார் எம்பி ஆகியோரின் மறைவுக்கு மக்களவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தொடரில் பங்கேற்ற எம்பிக்கள்
கூட்டத்தொடரில் பங்கேற்ற எம்பிக்கள்
Published on

புதுடெல்லி:

கொரோனா அச்சுறுத்தல், எல்லையில் சீன படைகளின் அத்துமீறல் மற்றும் பொருளாதார பிரச்சினையில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டுகள் என பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 9 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியது. அப்போது பிரதமர் மோடி மற்றும் எம்பிக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து தனி மனித இடைவெளியுடன் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் வசந்தகுமார் எம்பி ஆகியோருக்கு அஞ்சலி தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த ஆண்டில் மறைந்த பண்டிட் ஜஸ்ராஜ், சத்தீஷ்கர் முன்னாள் எம்பி அஜித் ஜோகி, மத்திய பிரதேச கவர்னர் லால்ஜி டாண்டன், உ.பி. மந்திரிகள் கமால் ராணி, சேட்டன் சவுகான், முன்னாள் மத்திய மந்திரிகள் ரகுவன்ஷ் பிரசாத் சிங் உள்ளிட்டோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதனையடுத்து மக்களவை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அக்டோபர் 1-ந் தேதி வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். மாநிலங்களவை கூட்டம் முதல் நாளான இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com