பாஜக பெண் வேட்பாளரை அவமதித்த விவகாரம்- கமல்நாத்துக்கு மத்திய பிரதேச முதல்வர் கண்டனம்

பாஜக பெண் வேட்பாளரை தரக்குறைவாக பேசிய தொடர்பாக கமல்நாத்துக்கு மத்திய பிரதேச முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்
ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்
Published on

போபால்:

மத்திய பிரதேச மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் டப்ரா தொகுதியில் பாஜக சார்பில் இமர்தி தேவி போட்டியிடுகிறார். அவரை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதுபற்றி மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், ‘இது இமர்தி தேவிக்கு மட்டுமல்ல, எம்.பி.யின் மகள்கள் / சகோதரிகளுக்கும் ஏற்பட்ட அவமானம். இவ்வளவு காலம் காங்கிரசில் பணியாற்றிய மகளுக்கு எதிராக கமல்நாத் இவ்வளவு மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். மக்கள் இதனை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com