

வாணாபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மணலூர் பகுதியை சேர்ந்தவர் ரஷீத் (வயது 38). இவர், தனது மனைவி நிறைமாத கர்ப்பிணியான ஆயிஷாவை (24) மருத்துவ பரிசோதனைக்காக திருவண்ணாமலையில் உள்ள மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதனை செய்த பிறகு மணலூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
வாணாபுரம் அருகே வந்தபோது ரஷீத் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும், அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளும் திடீரென மோதிக்கொண்டன. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கணவன் - மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரஷீத் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.