மணக்குடி பாலத்தில் அரசு பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்: 2 பேர் படுகாயம்

மணக்குடி பாலத்தில் மோட்டார் சைக்கிளும் பஸ்சும் மோதிக் கொண்ட விபத்தில் 2 சமையல் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
மணக்குடி பாலத்தில் அரசு பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்: 2 பேர் படுகாயம்
Published on

என்.ஜி.ஓ.காலனி:

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.30 மணிக்கு மணக்குடி நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ் மணக்குடி பாலத்தில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், பஸ்சும் மோதிக் கொண்டன.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த கொட்டாரம் ஆறுமுக புரத்தை சேர்ந்த வினோத் (வயது 28), அவரது நண்பர் கண்ணன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

சமையல் தொழிலாளர்களான இவர்கள் இன்று சமையல் வேலைக்காக சென்றபோது விபத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் இருவரையும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணக்குடி பாலத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் பயணம் செய்பவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். விபத்துகளும் அதிகமாக நடக்கிறது. எனவே உடனே மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும். பகல் நேரத்தில் போக்குவரத்து போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com