மீன்சுருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி மீன் வாங்க சென்றவர் பலி

மீன்சுருட்டி அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மீன் வாங்க சென்றவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மீன்சுருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி மீன் வாங்க சென்றவர் பலி
Published on

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே உள்ள பாகல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையன்(45). இவர் நேற்று காலை வீட்டிற்கு மீன் வாங்குவதற்காக தனது மொபட்டில் பாப்பாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மீன்சுருட்டி அருகேயுள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் கருப்பையன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து ஜெயங்கொண்டம்  இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் வழக்குபதிந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சென்னை பாடியை சேர்ந்த ஆறுமுகம் மகன் நல்லதம்பி (20) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com