குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் புது மாப்பிள்ளை பலி

குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் கல்லின் மீது மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

குளச்சல்:

குளச்சல் பாலப்பள்ளம் மேல்விளை பகுதியை சேர்ந்தவர் மெர்லின்மெரிஷ் (வயது 28). இவர் கால்டாக்சி நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து 10 மாதங்கள் ஆகிறது.

சம்பவத்தன்று இவர் வேலை முடிந்த பின்னர் குளச்சலில் இருந்து பாலப் பள்ளத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஒற்றைபனை விளை அருகே வரும்போது அந்த பகுதியில் புதிதாக வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதற்காக சாலையோரம் மணல் கொட்டப்பட்டு இருந்தது. இந்த மணலை சுற்றி கருங்கல் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இரவு நேரம் அந்த பகுதி இருட்டாக காணப்பட்டது. இதனால் மெர்லின்மெரிஷ் கல்லின் மீது மோதினார். இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு குளச்சல் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com