பாலக்கோடு அருகே தீக்குளித்து தற்கொலை: சிகிச்சை பெற்ற தாய்-மகள் உயிரிழப்பு

பாலக்கோடு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட தாய், குழந்தை மீது மண்எண்ணை ஊற்றி தீவைத்து கொன்று, தானும் தீவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்கோடு அருகே தீக்குளித்து தற்கொலை: சிகிச்சை பெற்ற தாய்-மகள் உயிரிழப்பு
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள குத்தலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணிமுத்து. பெயிண்டர் இவருடைய மனைவி அனிதா (வயது29). இவர்களுக்கு தர்ஷினி, கனிஷ்கா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

தர்ஷினி கடந்த சில மாதங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். கடந்த 1 ஆண்டுகளாக அனிதா மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த அனிதா தனது குழந்தை கனிஷ்கா மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து விட்டு தன் மீதும் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

பின்னர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் பரிதாமாக இறந்தனர். இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட தாய், குழந்தை மீது மண்எண்ணை ஊற்றி தீவைத்து கொன்று, தானும் தீவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com