கடிதம் எழுதி வைத்து விட்டு தாயுடன் மாயமான என்ஜினீயரிங் பட்டதாரி பெண்

புதுவை அருகே கடிதம் எழுதி வைத்து விட்டு தாயுடன் மாயமான என்ஜினீயரிங் பட்டதாரி பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
பட்டதாரி பெண் மாயம் (கோப்பு படம்)
பட்டதாரி பெண் மாயம் (கோப்பு படம்)
Published on

புதுச்சேரி:

புதுவை சொக்கநாதன் பேட்டை ராமலிங்கம் நகர் காமராஜர் வீதியை சேர்ந்தவர் பாபு (வயது 52). விவசாயி. இவரது மனைவி தென்னரசி (47). இவர்களது மகள் பவித்ரா (21). பி.டெக்சிவில் என்ஜினீயரிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

பவித்ரா வெளியூருக்கு சென்று வேலை செய்ய விரும்பினார். ஆனால், அதனை பாபு ஒப்புக்கொள்ளவில்லை. புதுவையிலேயே வேலை தேடிக்கொள்ளுமாறு பவித்ராவிடம் அறிவுறுத்தினார். ஆனாலும், வெளியூருக்கு வேலைக்கு செல்வதில் பவித்ரா பிடிவாதமாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற பவித்ரா மற்றும் அவரது தாய் தென்னரசி மீண்டும் வீடு திரும்பவில்லை.

அப்போது வீட்டில் பவித்ரா எழுதி வைத்திருந்த கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் தாயுடன் வேலை தேடி வெளியூர் செல்வதாக பவித்ரா குறிப்பிட்டு இருந்தார்.

பல நாட்களாக மகள் மற்றும் மனைவியை பற்றி எந்தவித தகவலும் தெரியாததால் பாபு இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து தாயுடன் மாயமான என்ஜினீயரிங் பட்டதாரி பெண்ணை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com