அரசு ஆஸ்பத்திரியில் தாய்-சேய் உயிரிழப்பு: மாநில சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் விசாரணை

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது தாயும்-சேய் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் விசாரணை
சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் விசாரணை
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகேயுள்ள ஆர்.எஸ்.மடையை சேர்ந்தவர் கீர்த்திகா (வயது 21), இவருடைய கணவர் முருகேசன் வெளிநாட்டில் பணிபுரிகிறார்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட கீர்த்திகாவும், பிறந்த ஆண் குழந்தையும் பரிதாபமாக இறந்தனர். முறையாக சிகிச்சை அளிக்காததால் தான் தாயும், சேயும் இறந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த விவகாரம் குறித்து மாநில சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை டீன் அல்லி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் வெங்கடாச்சலம் தலைமையில் நேற்று விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த நேரத்தில் இருந்த டாக்டர்கள், செவிலியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பிரசவப்பிரிவில் உள்ள வசதிகள் குறித்து சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com