குழந்தையை தவிக்க விட்டு பணத்துடன் மாயமான இளம்பெண் - போலீசார் விசாரணை

மூலைக்கரைப்பட்டி அருகே குழந்தையை தவிக்க விட்டு பணத்துடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 57). இவர் அங்கு மட்டன் கடை நடத்தி வருகிறார். இவரது 2-வது மகள் கற்பகத்திற்கும் (30), கழூவூரை சேர்ந்த சின்னத்துரை என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கற்பகம் கணவரை பிரிந்து தனது குழந்தையுடன் தந்தை முருகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2-ந் தேதி வீட்டை விட்டு சென்ற கற்பகம் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அப்போது அவர் தனது தாயாரின் ஏ.டி.எம் கார்டையும் எடுத்து சென்றுள்ளார். ஏ.டி.எம் கார்டு மூலம் வங்கி கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்தையும் எடுத்துள்ளார். மேலும் தனது குழந்தையையும் தவிக்க விட்டு விட்டு சென்றுள்ளார்.

இது குறித்து முருகன் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்துடன் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com