பருவமழை டெல்லியை இந்த வாரத்தில் தாக்கும்: கனமழை பெய்யும் என எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை டெல்லியை இன்னும் மூன்று நான்கு நாட்களில் தாக்கும். இதனால் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பருவமழை டெல்லியை இந்த வாரத்தில் தாக்கும்: கனமழை பெய்யும் என எச்சரிக்கை
Published on

வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என்று கூறியுள்ள இந்திய வானிலை துறை, இன்னும் மூன்று நான்கு நாட்களில் பருவமழை டெல்லியை தாக்கும் என கூறியுள்ளது. அப்போது மிகமிக அதிக அளவில் மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

மேலும், குறிப்பாக கோங்கன் மற்றும் கோவாவில் அதிக மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. டெல்லியை தாக்கும் அதே நேரத்தில் குஜராத், மத்திய பிரதேசம் மாநிலத்திலும் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.

கடற்கரை பகுதியான கர்நாடகா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், குஜராத் பகுதிகள் மற்றும் கேரளாவில் நாளை அளவிற்கு அதிகமாக மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com