

இந்தோனேசியாவில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு வனவிலங்குகளை படம் பிடிக்கச் சென்ற புகைப்படக் கலைஞர் டேவிட் ஜே.ஸ்லேட்டர் தன்னுடைய கேமராவை ஓரிடத்தில் வைத்துவிட்டு சென்றார்.
அந்த கேமராவைக் கண்ட நருடோ என்னும் சிம்பன்சி வகையை சேர்ந்த மக்காக்வே இனத்தை சேர்ந்த ஒருகுரங்கு, கேமராவை கையில் எடுத்து மற்ற குரங்குகளை புகைப்படம் எடுத்தது. மேலும் தன்னைத்தானே அது செல்பியும் எடுத்துக் கொண்டது. இதை கவனிக்காமல் அந்த கேமராவை எடுத்துச் சென்ற டேவிட் ஜே.ஸ்லேட்டர் அதில் உள்ள புகைப்படங்களைப் பார்க்கும்போது குரங்கின் செல்பியை கண்டு வியப்படைந்தார்.
அதனைத் தொடர்ந்து குரங்கின் செல்பியை டேவிட் இணையத்தில் வெளியிட்டார். அப்புகைப்படம் உலகளவில் பிரபலமானது. இந்த செல்பி புகைப்படத்துக்கு டேவிட் மற்றும் அவர் பணியாற்றிவரும் ஊடக நிறுவனத்தினர் உரிமை கோரிய நிலையில், அதனை எதிர்த்து விலங்குகள் நல அமைப்பான ’பீட்டா’ சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கில் காப்புரிமை சட்டத்தின்படி தனது செல்பிக்கு காப்புரிமை கோர நருட்டோவுக்கு முழு உரிமையுள்ளது. எனவே, டேவிட் ஜே.ஸ்லேட்டர் மற்றும் அவரது நிறுவனத்தினருக்கு அந்த உரிமையை வழங்கக்கூடாது என பீட்டா அமைப்பு தெரிவித்திருந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் புகைப்படத்திற்கான காப்புரிமையை நருடோவுக்கு வழங்க முடியாது என தீர்ப்பளித்தனர். மிக குறிப்பாக, காப்புரிமை என்பது மனிதர்களுக்கு மட்டுமே உண்டான உரிமையாகும். குரங்கு உள்ளிட்ட விலங்கினங்களுக்கு எல்லாம் இதை அளிக்க இயலாது என்று கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் சான்பிரான்சிஸ்கோ 9-வது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பீட்டா மீண்டும் வழக்கு தொடர்ந்தது.
'விலங்குகளுக்கு காப்புரிமை இல்லையென்றாலும் ஒரு வேலையை யார் செய்து முடிக்கிறார்களோ.,? அவர்களே அதற்கான உரிமையாளர்கள் என்ற முறையில் நருடோவுக்கு அந்த புகைப்படத்துக்கான உரிமையை வழங்க வேண்டும் என தன்னுடைய மனுவில் பீட்டா தெரிவித்திருந்தது.
இந்த மேல்முறையீட்டுவழக்கில் பீட்டாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் உலகின் முதல் காப்புரிமை பெற்ற விலங்கினம் என்ற பெருமை நருடோவுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு விலங்குகள் நல ஆர்வலர்களிடயே மேலோங்கி இருந்தது.
இந்த காப்புரிமை வழக்கில் வெற்றி பெற்றால், மேற்கண்ட செல்பி புகைப்படத்தை இனி விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையை அழிவின் விளிம்பில் உள்ள சிம்பன்சி குரங்குகளின் நல்வாழ்வுக்காக செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாக இந்த வழக்கை தொடர்ந்துள்ள பீட்டா அமைப்பினர் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில், பீட்டா அமைப்பினருடன் சமரசம் செய்துகொள்ள விரும்பிய புகைப்பட கலைஞர் ஸ்லேட்டர், மேற்கண்ட புகைப்படத்தின் மூலம் இனி கிடைக்கும் வருமானத்தின் 25 சதவீதத்தை இந்தோனேசியா நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள இவ்வகை குரங்குகளை பாதுகாப்பதற்காக அளிக்கப் போவதாக தெரிவித்தார். இதற்கு பீட்டா அமைப்பினர் சம்மதிக்காமல்மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்புக்காக காத்திருந்தனர்.
இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘காப்புரிமை சட்டங்கள் விலங்குகள் உரிமை கோர உருவாக்கப்பட்டது அல்ல. அவ்வாறு உரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ள பீட்டா அமைப்பினர், தாங்கள் அந்த படத்தில் உள்ள குரங்கின் அடுத்த நண்பர் என்றுன் உறவினர் என்பதையும் நீரூபிக்க தவறி விட்டனர்.