

நாசரேத்:
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் 2018-ம் ஆண்டு புத்தாண்டு ஆசீர்வாதக் கூட்டம் வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடுகிறார்கள். ஊழிய நிறுவனர் மோகன்.சி.லாசரஸ் கலந்து கொண்டு புத்தாண்டு வாக்குத்தத்தச் செய்தி வழங்கி, தேசத்தின் மக்களுக்காகவும், புத்தாண்டு ஆசீர்வாதத்திற்காகவும் சிறப்பு பிரார்த்தனை ஏறெடுக்கிறார். கூட்டம் முடிந்தவுடன் அனைத்து ஊர்களுக்கும் திரும்ப செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஜெபக்குழுவினர் செய்து வருகிறார்கள்.