

புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான நடராஜன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பல்வேறு தலைவர்கள், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
நடராஜன் உடலுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-
புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் மறைவு அதிர்ச்சி அடைய கூடிய வகையில் அமைந்திருக்கிறது. நடராஜன் மாணவர் பருவத்தில் இருந்தபோது தமிழ் மொழிக்காக நடைபெற்ற போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதிலே தனது உணர்வை வெளிப்படுத்தியவர்.
தலைவர் கலைஞருடைய அன்பை பெற்றவராக திராவிட இயக்கத்தின் மீது அளவு கடந்த பற்று கொண்டவராக விளங்கியவர். அதுமட்டுமல்ல, தமிழ் இலக்கியத்திலே அவர் ஆர்வம் கொண்டு ஆற்றி இருக்கக்கூடிய பணிகளை யாரும் மறந்து விட முடியாது.
தொடக்க காலத்தில் தி.மு.க.வின் மாணவர் அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மொழிப் போராட்டத்திலே பங்கேற்ற வரலாற்று நிகழ்ச்சிகளையும் மறந்து விட முடியாது.
அப்படிப்பட்ட இலக்கியவாதியாக, தமிழ் மீது பற்று கொண்டவராக விளங்கிய நடராஜனின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.
அவரை இழந்து வாடிக்கொண்டிருக்கிற அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தி.மு.க.வின் சார்பில், குறிப்பாக தலைவர் கலைஞரின் சார்பில் மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-