மீஞ்சூர் அருகே புதிதாக அமைய உள்ள அனல்மின் நிலையத்தில் வேலை கேட்டு கிராம மக்கள் முற்றுகை

மீஞ்சூர் அருகே ஊரணம்பேடு கிராமத்தில் கட்டப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தில் வேலை கேட்டு அப்பகுதி மக்கள் கம்பெனி வாயில் முன் முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர்.
மீஞ்சூர் அருகே புதிதாக அமைய உள்ள அனல்மின் நிலையத்தில் வேலை கேட்டு கிராம மக்கள் முற்றுகை
Published on

பொன்னேரி:

மீஞ்சூர் அடுத்த ஊரனம் பேடு, கிராமத்தில் 620 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அனல்மின் நிலையங்களை ஒட்டி வயலும் ஊரானம் பேடு, கொக்குமேடு, செங்கழநீர்மேடு உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் வசிப்பவர்களின் நிலங்களில் தான் அனல்மின் நிலைய பணிகள் நடந்துவருகின்றன. இந்த நிலங்களை கொடுத்ததற்காக அப்பகுதி இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

பொன்னேரி கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி வேலை வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் உறுதியளித்த படி வேலை வாய்ப்பபை இதுவரை வழங்காததை கண்டித்து 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து காட்டூர் வருவாய் ஆய்வாளர் செல்வநாதன் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினர்.விரைவில் வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்

X

Maalai Malar
www.maalaimalar.com