திருப்பத்தூர் அருகே மினிவேன் கவிழ்ந்து சிறுவன் பலி

திருப்பத்தூர் அருகே மினிவேன் கவிழ்ந்து சிறுவன் பலியானான். பெண்கள் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.
திருப்பத்தூர் அருகே மினிவேன் கவிழ்ந்து சிறுவன் பலி
Published on

திருப்பத்தூர்:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஊர்கவுண்டனூரை சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் செல்லதுரை (வயது 8). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

சிவக்குமார் தனது உறவினர்களுடன் 20 பேருடன் ஆண்டியப்பனூர் அருகே உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நேற்று மினிவேனில் சென்றனர். பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பினர். வெங்டாபுரம் என்ற இடத்தில் வந்த போது மினிவேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

இதில் செல்லதுரை சம்பவ இடத்திலேயே இறந்தார். சிவக்குமார், கோவிந்தசாமி, மீனா, உண்ணாமலை, சேட்டு உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு படுகாயமடைந்தவர்களை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com