தமிழகத்தில் இதுவரை 800 போலி டாக்டர்கள் கண்டுபிடிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் இதுவரை 800 போலி டாக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோவை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 800 போலி டாக்டர்கள் கண்டுபிடிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
Published on

கோவை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது-

கோவை அரசு ஆஸ்பத்திரியில் 4 பேருக்கு சிறப்பான இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் அதிநவீன சிறப்பு வசதிகள் செய்து தரப்படும். இறந்தவர்களை கொண்டு செல்லும் அமரர் ஊர்தியில் ஒன்றுக்கும் மேற்பட்ட உடல்கள் கொண்டு செல்லப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.


தமிழகத்தில் இதுவரை 800 போலி டாக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். எம்.பி.பி.எஸ். படிக்காமல் மருத்துவம் செய்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்படுவர். உடல் உறுப்பு தானத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஜெயிக்கா என்கிற திட்டத்தில் 280 கோடி நிதி வழங்கப்பட்டு அதிநவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 23 கோடியே 50 லட்சம் மதிப்பில் 837 செல்கவுண்டர்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரத்தத்தில் உள்ள வெள்ளை, சிவப்பு அணுக்களை குறைந்த நேரத்தில் கணக்கிட முடியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com