கரூரில் ரூ. 21.12 கோடி செலவில் புதிய சாலை- எம்ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு

கரூர் ரெயில் நிலையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை 7 வரை தார்சாலை அமைக்கப்பட உள்ளது. இதனை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
கரூரில் ரூ. 21.12 கோடி செலவில் புதிய சாலை- எம்ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு
Published on

கரூர்:

கரூர் ரெயில் நிலையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை 7 வரை தார்சாலை அமைக்கப்பட உள்ளது. இதையடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குகைவழிப்பாதை, ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு  மேற்கொண்டார். ஆய்வின்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறியதாவது:-

கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வரும் பொதுமக்கள் நகரின் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் நகரின் புறவழியாக வாரணாசி முதல் கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல ஏதுவாக அடிப்படை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.21.12 கோடி மதிப்பில் 8 அடி வடிகால் வசதியுடன் கூடிய 32 அடி அகலத்திலான தெரு விளக்குகளுடன் கூடிய 17 குணுக்கு சாலைகளை இணைக்கும் பிரதான சாலை அமைப்பதற்காக இன்று  ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஓரிரு தினங்களில் பணிகள் துவக்கப்படும்.  இதனால் நகருக்குள் போக்குவரத்து நெரிசலின்றி புற வழியாக பொதுமக்கள் எளிதாக பயணிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார். 

நிகழ்ச்சியின் போது கலெக்டர் அன்பழகன்,  மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், உதவி  கலெக்டர் சரவணமூர்த்தி, உதவி இயக்குநர் நில அளவை ரவீந்திரன், நகராட்சி ஆணையர் அசோக்குமார், கூட் டுறவு சங்க பிரதிநிதிகள் காளியப்பன், நெடுஞ்செழியன், திருவிக, என்.எஸ்.கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com