அமைச்சர் உதயகுமார்
அமைச்சர் உதயகுமார்

மதுரை மாவட்டத்தை தமிழகத்தின் 2-வது தலைநகராக்க தீவிர முயற்சி

மதுரை மாவட்டத்தை தமிழகத்தின் 2-வது தலைநகராக்க வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.
Published on

மதுரை:

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையை 2-ம் தலைநகராக்க குரல் எழுப்பிய நிலையில் அவரைத் தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவும் மதுரையை 2-வது தலைநகராக்கும் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தை தமிழகத்தின் 2-வது தலைநகராக்க வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.

மதுரையில் ஆக.21ல் அமைச்சர் உதயகுமார் தலைமையில் தென்மாவட்ட தொழில் வர்த்தகர்களின் கலந்தாய்வு நடக்கிறது. தொழில் வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்துள்ள கலந்தாய்வில் 10 மாவட்ட தொழில் வர்த்தகர்கள் பங்கேற்கின்றனர்.

மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்ட தொழில் வர்த்தகர்கள் கலந்து கொள்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com