திமுகவில் துப்பாக்கி கலாசாரம் தலைதூக்கியுள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவில் துப்பாக்கி கலாசாரம் தலைதூக்கியுள்ளது என எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்
Published on

சென்னை:

சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

திமுக ஆட்சிக் காலத்தில் நில அபகரிப்பு அதிகமாக இருந்தது. தற்போது துப்பாக்கி கலாசாரமும் திமுகவில் தலைதூக்கியுள்ளது என்று எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

திமுகவினரை பார்த்து மக்கள் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது. ஆட்சியில் இல்லாதபோதே இப்படி அரங்கேறுகிறது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் எம்எல்ஏ இதயவர்மனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com