காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டம் ஷாடிமார்க் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது.
ராணுவம் தாக்குதல்
ராணுவம் தாக்குதல்
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் ஷாடிமார்க் பகுதியில் பாதுகாப்பு படையினர் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர்.

அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படையினரும பதில் தாக்குதல் நடத்தினார்கள்.

இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களது பெயர் நைரா, இர்பான் என்றும், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.

பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு இருந்தது. மேலும் அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா? என்று தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com