ஆப்கானிஸ்தான்: ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - பத்துக்கும் அதிகமானவர்கள் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தஹார் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாமின் மீது தீவிரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் ராணுவ வீரர்கள் 10 பேரும், 12 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான்: ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - பத்துக்கும் அதிகமானவர்கள் பலி
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தஹார் மாகாணத்தின் ஷவாலி கோட் மாவட்டத்தில் உள்ள அசிக்சாய் என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமின் மீது நேற்று பின்னிரவில் உள்ளூர் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர்.

ராணுவ வீரர்களும் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிகளால் சுட்டு எதிர் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் சிலமணி நேரம் நீடித்த இந்த மோதலில் ராணுவத்தை சேர்ந்த பத்துக்கும் அதிகமானவர்கள் வீர மரணம் அடைந்ததாகவும், தாக்குதல் நடத்திய 12 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் மிகுந்த இப்பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com