ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

ஜம்மு - காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். #JammuKashmir #Shopianattack
ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு - காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஷோபியான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலிகுண்ட் பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். பதில் தாக்குதலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பயங்கரவாதி தப்பியோடி விட்டனர். இந்த தாக்குதலில் யாரும் காயம் அடையவில்லை என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிப்பதற்காக தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #JammuKashmir #Shopianattack

X

Maalai Malar
www.maalaimalar.com