ஆப்கானிஸ்தான்: உளவுத்துறை பயிற்சியகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள தேசிய உளவுத்துறை பயிற்சியகத்துக்குள் இன்று நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான்: உளவுத்துறை பயிற்சியகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரின் அஃப்ஸர் பகுதியில் அந்நாட்டின் உளவு அமைப்பாக உள்ள தேசிய பாதுகாப்பு இயக்குனரகத்தின் பயிற்சியகம் அமைந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.10 மணியளவில் இந்த பயிற்சியக வளாகத்திற்குள் நுழைந்த சில தீவிரவாதிகள் புதிய கட்டுமானம் நடைபெற்றுவரும் இடத்தின்மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தி வருவதாகவும், பாதுகாப்பு படையினர் பதிலடி தந்து வருவதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் நஸ்ரத் ரஹீம் தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com