டூயல் செல்ஃபி கேமரா கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் டூயல் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Published on

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ எனும் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஆகஸ்டு மாத வாக்கில் அறிமுகமான மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக அறிமுகமாகியுள்ள கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன் மற்றும் மெல்லிய பெசல்கள் மற்றும் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டுள்ளது.

ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட், 20 எம்பி + 8 எம்பி செல்ஃபி கேமரா, போர்டிரெயிட் மோட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் செல்ஃபி புகைப்படங்களின் பின்னணியை தெளிவற்றதாக மாற்றியமைத்து, புகைப்படத்திற்கு அழகை சேர்க்கும். இத்துடன் 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் பின்புறம் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் வழங்கியுள்ள புதிய கைரேகை ஸ்கேனர் ஸ்மார்ட்போனினை 0.2 நொடிகளில் அன்லாக் செய்யும் திறன் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபேஸ் பியூட்டி மோட், ஆட்டோ சீன் டிடெக்ஷன், ஃபேஸ் கேலரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது. இவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பதை பயன்படுத்தி புகைப்படங்களை பிரித்து வைக்கும்.


மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி ப்ரோ சிறப்பம்சங்கள்:

- 5.7-இன்ச் 1440x720 பிக்சல் எச்டி+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்
- அட்ரினோ 505 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 1080 பிக்சல் வீடியோ பதிவு செய்யும் வசதி
- 20 எம்பி + 8 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி பிளாஷ்
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்ஏஎச் பேட்டரி

X

Maalai Malar
www.maalaimalar.com