பெரம்பலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை வைத்திலிங்கம் எம்.பி. ஆய்வு

பெரம்பலூரில் ஆகஸ்ட் 5-ந்தேதி எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் பந்தல் அமைக்கும் பணியை வைத்திலிங்கம் எம்.பி.நேரில் பார்வையிட்டார்.
பெரம்பலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை வைத்திலிங்கம் எம்.பி. ஆய்வு
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூரில் வரும் ஆகஸ்ட் 5-ம்தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பெரம்பலூர் பாலக்கரை அருகே அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகளையும், மேற்கொள்ள வேண்டிய  நடவடிக்கைகள் குறித்தும் விழா குழு தலைவரும், எம்பி.யுமான வைத்திலிங்கம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பந்தல் அமைக்கும் பணிகள் குறித்தும், விழா மேடையில் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் இருக்கை அமைப்பு, பொதுமக்கள் இருக்கை அமைப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்பாடு போன்றவை குறித்தும், வாகனங்களை நிறுத்தம், கண்காணிப்பு கேமரா பொருத்துதல், முக்கியதஸ்தர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்குதல் போன்றவை குறித்து கேட்டறிந்தார்.

இதை தொடர்ந்து மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் கூட்டம் ஏற்பாடு மற்றும் மக்கள் அழைத்து வருவது குறித்து ஆலோசனை செய்தார்.

நிகழ்ச்சியின் போது அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், அமைப்பு செயலாளர் அருணாசலம், எம்.பி சந்திரகாசி,எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணசாமி,கர்ணன், சிவப்பிரகாசம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com