மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
Published on

மேட்டூர்:

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், தமிழகத்தில் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வந்தாலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.

இந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இதனால் நேற்று முன்தினம் விநாடிக்கு 2,478 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 1,829 கன அடியாக குறைந்தது.இன்று மேலும் நீர்வரத்து சரிந்தது. இன்று காலை விநாடிக்கு 1,459 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது. நேற்று காலை 90.25 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 89.21 அடியாக குறைந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com