மேட்டுப்பாளையத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.3¼ லட்சம் பறிமுதல்

மேட்டுப்பாளையத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.3¼ லட்சம் பறிமுதல்

மேட்டுப்பாளையத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.3¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
Published on

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் ஆசிரியர் காலனியில் பறக்கும் படை அலுவலரும் எஸ்.எஸ்.குளம் வட்டார வளர்ச்சி அலுவலருமான லதா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாலை சுமார் 5.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை பச்சாபாளையத்திற்கு சென்ற ஆவின் பால் லாரியைநிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் மேட்டுப்பாளையம் ராஜீவ் நகரைச்சேர்ந்த டிரைவர் ரத்தினசபாபதி(21) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.3லட்சத்து 32 ஆயிரத்து 120ஐ கைப்பற்றி பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கூடுதல்தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் புனிதாவிடம் ஒப்படைத்தனர். #LokSabhaElections2019

X

Maalai Malar
www.maalaimalar.com