

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பிராந்தியம் கிரீன்லாந்து. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தீவு இதுவாகும். பருவநிலை மாற்றம் காரணமாக கிரீன்லாந்து தீவில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் அதிகரித்து வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே சமயம் அங்கு எண்ணெய், தாதுக்கள் போன்ற இயற்கை வளங்கள் கொட்டி கிடப்பதால் சீனா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் அங்கு ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றன.இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கிரீன்லாந்தை வாங்க விரும்புவதாக தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.