ஜெர்மனி கால்பந்து வீரர் மரியோ கோமஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு

ஜெர்மனி கால்பந்து அணியின் மூத்த வீரரான மரியோ கோமஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். #MarioGomez
ஜெர்மனி கால்பந்து வீரர் மரியோ கோமஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு
Published on

ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில், ஜெர்மனி அணியில் மரியோ கோமஸ் இடம்பிடித்திருந்தார். இவருடன் பல முன்னணி அனுபவ வீரரகள் இடம்பிடித்திருந்தனர். உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக ஜெர்மனி கருதப்பட்டது. ஆனால் லீக் சுற்றோடு வெளியேறியது. இதனால் அந்த அணி மீது கடும் விமர்சனம் எழும்பியது.

அந்த அணியின் முன்னணி வீரரான மெசுட் ஒசில் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் 33 வயதாக மரியோ கோமஸும் ஓய்வு பெற்றுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com