ஐஎஸ்எல் கால்பந்து - கேரளா, மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது

மும்பையில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்துள்ளது.
கோல் அடித்த மகிழ்ச்சியை கொண்டாடும் ல் கேரளா வீரர்
கோல் அடித்த மகிழ்ச்சியை கொண்டாடும் ல் கேரளா வீரர்
Published on

மும்பை:

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்,  மும்பை எப்.சி. அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் இரு அணிகளும் சமனிலை வகித்தன.

இரண்டாவது பாதியின் 75-வது நிமிடத்தில் கேரளா அணியின் மெஸ்சி ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மும்பை அணி வீரர் செர்மிடி 77-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இறுதியில், மும்பை எப்.சி. மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இதன்மூலம் மும்பை அணி தான் ஆடிய 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்வி மற்றும் 4 ஆட்டங்களில் டிரா செய்துள்ளதால் 7 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com