உலக மகளிர் தினத்துக்கு போட்டியாக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம்

உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பெண்களிடம் இருந்து பாதுகாக்க கோரி ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் இன்று சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
உலக மகளிர் தினத்துக்கு போட்டியாக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை:

உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பெண்களிடம் இருந்து பாதுகாக்க கோரி ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் இன்று சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். சங்க தலைவர் அருள்துமிலின் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், ஆண்களுக்கு எதிராக இழைக்கப்படும் சட்ட மீறல்களை தடுக்க வேண்டும். திருமணமான ஆண்கள் தற்கொலைக்கு காரணமாக இருக்கும் மனைவிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். வரதட்சணை கொடுமை என்ற பெயரில் வழக்கு போடுவதில் இருந்து கணவரின் குடும்பத்தினரை பாதுகாக்க வேண்டும்.

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும் உள்பட பல கோரிக்கை வலியுறுத்தினர். இதில் நிர்வாகிகள் மதுசூதனன், வெற்றிவேல், ஆல்பர்ட், அப்துல்லத்தீப் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com