நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிராக மருத்துவ மாணவர்கள் போராட்டம்

‘நெக்ஸ்ட்’ தேர்வுக்கு எதிராக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நேற்று 200-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்களை படத்தில் காணலாம்.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்களை படத்தில் காணலாம்.
Published on

சென்னை:

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வை முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வாக (நெக்ஸ்ட்) தேசிய அளவில் நடத்த இந்த மசோதா வழிசெய்கிறது. எனவே இந்த மசோதாவுக்கு மருத்துவத்துறையில் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

இந்த தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிராக, சென்னை மருத்துவக்கல்லூரியில் 2, 3, 4-ம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர், தங்கள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் குதித்தனர்.

இது குறித்து மாணவர் ஒருவர் கூறியதாவது:-

சமூக சுகாதார வழங்குநர் என்னும் புதிய முறையை அமல்படுத்தி டாக்டர்கள் அல்லாதவர்களுக்கு 6-மாதம் இணைப்பு பயிற்சி அளிக்கப்பட்டு டாக்டராக பணி செய்ய இந்த மசோதா அனுமதி அளிக்கிறது. ஆனால் 5 வருடம் மருத்துவம் படித்த மருத்துவ மாணவர்களுக்கு ‘நெக்ஸ்ட்’ தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் என்ற நிபந்தனையை தேசிய மருத்துவ ஆணையம் கொண்டுவருகிறது. இதன் மூலம் ‘நெக்ஸ்ட்’ தேர்வு எழுதினால் மட்டுமே மருத்துவ மாணவர்கள் டாக்டராக பணி செய்ய அனுமதி கிடைக்கும்.

இது போன்ற, மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இந்த தேசிய மருத்துவ ஆணையத்தை ஒழித்து, முன்பு இருந்த இந்திய மருத்துவ கவுன்சிலை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். மேலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கல்விக் கட்டண முறையை புதுப்பித்ததை எதிர்த்தும், நவீன அறிவியல் மருத்துவ முறையை மாற்றி பழங்கால மருத்துவ பயிற்சி வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com