ஓட்டப்பிடாரத்தில் ம.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஓட்டப்பிடாரம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ம.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஓட்டப்பிடாரத்தில் ம.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

ஓட்டப்பிடாரம்:

அனைத்து பயிர் காப்பீட்டுக்கான இழப்பீட்டு தொகை உடனடியாக வழங்க வேண்டும், ஓட்டப் பிடாரம் பகுதியில் பழுடைந்த அனைத்து கிராம சாலைகளை சீரமைக்க வேண்டும், அனைத்து கிராமங்களிலும் அடிப்படை சுகாதார வசதி செய்து தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரில் ம.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் வீரபாண்டி கோபி, கிழக்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டி சரவணன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் யோகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் அழகுசுந்தரம் பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், மாநில தீர்மான குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி பாண்டியன், தூத்துக்குடி மாநகர செயலாளர் முருகபூபதி, மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் லிங்கசாமி, நகர செயலாளர் ஜெயராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com