காதல் ஜோடியிடம் முறைகேடாக நடந்த போலீசாரை கைது செய்ய வேண்டும் - மார்க்சிஸ்டு கட்சி வலியுறுத்தல்

புதுச்சேரி அருகே காதல் ஜோடியிடம் முறைகேடாக நடந்த போலீசாரை கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுச்சேரி:

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் முதன்மையான பொருளாதாரமாக இருப்பது சுற்றுலா மற்றும் அதனை சேர்ந்த தொழில்களுமே. இந்த நிலையில் கடந்த வாரம் சுற்றுலா வந்த பயணிகளிடம் மிரட்டி பணம் பறித்ததுடன் அவர்களிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட சம்பவம் கொடூரமானது. இதனை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

வெளியூரிலிருந்து புதுவைக்கு சுற்றுலா வரும் பயணிகளை பாதுகாக்க வேண்டிய போலீசாரே தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுப்படுவது புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும்.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய போலீசாரே இது போன்ற கொடிய செயலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பொதுமக்களின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கியுள்ளது.

தற்போது புதுவை அரசு விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகளிடம் முறைகேடாக நடந்து கொண்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பெரியக்கடை போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார் சதீஷ் குமார் மற்றும் ரிசர்வ் பட்டாலியன் போலீஸ்காரர் சுரேஷ் ஆகியோரை கைது செய்ய வேண்டும். மேலும் இவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் செயல்படும் போலீஸ் துறையின் உயர் அதிகாரிகள் மீது உரிய விசாரனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com