

புதுடெல்லி:
மாருதி சுசுகி நிறுவனத்தின் லிமிட்டெட் எடிஷன் செலேரியோ மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் பண்டிகை காலத்தின் இறுதிவரை விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரன செலேரியோ மாடலை விட லிமிட்டெட் எடிஷன் விலையில் ரூ.22,500 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மாடல் VXi மற்றும் ZXi கிரேடுகளை சார்ந்தது என்பதால் லிமிட்டெட் எடிஷன் செலேரியோ மாடல்களை மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் மாடல்களில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். புதிய மாடலில் பாடி கிராஃபிக்ஸ், சைடு மோல்டிங் மற்றும் டோர் விசோர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் உள்புறங்களில் புதிய ஸ்டீரிங் ரேப், புதிய டிஷூ பாக்ஸ், ஆம்பியன்ட் லைட்டிங், புதிய இருக்கைகள் மற்றும் பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய உபகரணங்கள் கூடிய புதிய செலேரியோ மாடல் கார் அனைத்து விற்பனை மையங்களிலும் பெற முடியும்.
செலேரியோ லிமிட்டெட் எடிஷன் மாடலின் இன்ஜின் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய மாடலிலும் 67PS/90Nm 1,000சிசி பெட்ரோல் இன்ஜின் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் / ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. புதிய செலேரியோ லிட்டருக்கு 23.1 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிமிட்டெட் எடிஷன் செலேரியோ விலை இந்தியாவில் ரூ.4.87 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. 2014-ம் ஆண்டு விற்பனைக்கு வந்த செலேரியோ மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. மேலும் முன்பதிவு செய்து எட்டு மாதங்கள் கழித்தே காரை பெற வேண்டிய சூழல் நிலவியது. 2015-ம் ஆண்டில் செலேரியோ டீசல் மாடல் வெளியிடப்பட்டது.