திருவண்ணாமலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆசிரியை தற்கொலை

திருவண்ணாமலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட யோகா ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை தாமரை நகரை சேர்ந்தவர் சிவமணி. இவரது மகள் சாருலதா (வயது 27). இவர் ஒரு தனியார் பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாக யோகா ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அவருக்கு திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் ஈடுபட விருப்பமில்லை என்று தெரிகிறது.

இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த அவர் சம்பவத்தன்று தனது வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட யோகா ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாமரை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com