ராஜபாளையம் அருகே திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு-அரசு ஊழியர் கைது

காதலித்த பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கற்பழித்த அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு-அரசு ஊழியர் கைது
Published on

ராஜபாளையம்:

ராஜபாளையம் சோமையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது28). இவர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 வருடமாக முருகனும், 23 வயதுடைய இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.

அப்போது திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி காதலியை முருகன் கற்பழித்தார்.

இந்த நிலையில் முருகனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முருகனிடம் கூறினார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனா விசாரணை நடத்தினார். அப்போதும் முருகன் திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com