மதுரை அருகே திருமண ஆசை காட்டி கல்லூரி மாணவி கடத்தல்: பெற்றோருடன் வாலிபர் தலைமறைவு

திருமண ஆசை காட்டி கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற வாலிபர், பெற்றோருடன் தலைமறைவாகி விட்டார்.
Published on

மதுரை:

மதுரை அருகே உள்ள தோடனேரி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் சரண்யா (வயது20). நிலக்கோட்டையில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்த சரண்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்றவர் வீடுதிரும்ப வில்லை.

மாயமானது குறித்து பெற்றோர் விசாரித்தபோது தோடனேரியைச் சேர்ந்த தமிழரசன் (21) என்பவர் சரண்யாவை திருமண ஆசை காட்டி கடத்திச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து பாண்டியன், சமயநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மாணவி சரண்யா வாலிபர் தமிழரசன், அவரது தந்தை நடுக்காடு, தாயார் பேச்சியம்மாள் ஆகியோரும் தலைமறை வாகி விட்டதாக தெரிகிறது. இவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com