மரக்காணம் அருகே மதுபாட்டில் விற்ற பெண் கைது

மரக்காணம் அருகே மதுபாட்டில் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

மரக்காணம்:

மரக்காணம் அருகே கந்தாடு கிராமம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லலிதா (வயது 42). இவர் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி தனது வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் மற்றும் போலீசார் லலிதா வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது விற்பனைக்காக 10 மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து லலிதாவை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com