

புவனேஸ்வர்:
மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.
பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.
இந்நிலையில், ஒடிசா - சத்தீஸ்கர் மாநில எல்லைப்பகுதியில் மாவோயிஸ்ட்களின் கோட்டை என்று கருதப்படும் மல்காங்கிரி மாவட்டத்துக்குட்பட்ட துலசி பஹார் மலைப்பபகுதியில் பதுங்கியுள்ள மாவோயிஸ்டுகளை வேட்டையாடும் பணியில் இன்று பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
அப்போது இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உர்ரா என்னும் புணைப்பெயரை கொண்ட வட்டாம் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மல்காங்கிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜக்மோகன் மீனா தெரிவித்துள்ளார். #tamilnews #Maoistgunned