மானாமதுரை பகுதியில் தொடர்மழை- அகல் விளக்குகள் தயாரிப்பு பணி பாதிப்பு

மானாமதுரை பகுதியில் பெய்து வரும் மழையால் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
அகல் விளக்குகள்
அகல் விளக்குகள்
Published on

மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஆண்டு முழுவதும் மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு தயாராகும் பொருட்கள் தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் கேரளா, அந்தமான், மாலத்தீவு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. 

வருகிற 11-ந் தேதி கார்த்திகை தீபத்திருநாள் ஆகும். இதற்காக தினமும் ஆயிரக்கணக்கான கிளியான், தீப விளக்குகள், அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. தற்போது மானாமதுரை பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் உற்பத்தி செய்த மண்பாண்ட பொருட்களை உலர்த்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 

மழைக்காலங்களில் மண்பாண்ட பொருட்களை உலர்த்த எந்திரம் மற்றும் புதிதாக தொழிற்கூடங்கள் அமைக்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com