உ.பி.: விமானப்படை அலுவலகத்தின் சுவரை தாண்டி குதிக்க முயன்றவர் மீது பாதுகாப்பு படை துப்பாக்கி சூடு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள விமானப்படை அலுவலகத்தின் சுவரை தாண்டி குதிக்க முயன்றவர் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
உ.பி.: விமானப்படை அலுவலகத்தின் சுவரை தாண்டி குதிக்க முயன்றவர் மீது பாதுகாப்பு படை துப்பாக்கி சூடு
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள விமானப்படை அலுவலகத்தின் சுவரை தாண்டி குதிக்க முயன்றவர் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காஜியாபாத் நகரில் விமானப்படை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பாதுகாப்பு படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது விமானப்படை அலுவலகம் அமைந்துள்ள சுவரின் மீது ஒருவர் ஏறி உள்ளே குதிக்க முயல்வதை பாதுகாப்பு படையினர் கண்டனர். இதையடுத்து அவர் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அந்த நபரை மீட்ட பாதுகாப்பு படையினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு துப்பாக்கி சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com