மனைவியை எரித்துக் கொன்ற கணவர் 17 வருடங்கள் கழித்து கோர்ட்டில் சரண்டர்

மராட்டிய மாநிலத்தில் மனைவியை எரித்துக் கொன்ற கணவன் 17 வருடங்களுக்கு பின்னர் செய்த தவறுக்காக வருந்தி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மனைவியை எரித்துக் கொன்ற கணவர் 17 வருடங்கள் கழித்து கோர்ட்டில் சரண்டர்
Published on

மும்பை:

மராட்டியம் மாநிலம் நாந்தேட் மாவட்டத்தின் அருகே வசித்து வந்த பிராஜி மேக்தார் என்பவர் கடந்த 2000-ம் ஆண்டில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, அவரை எரித்து விட்டு மேக்தார் யார் கண்ணிலும் படாமல் தலைமறைவாகி விட்டார்.

உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மனைவி, மறுதினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், 17 வருடங்களுக்கு பின்னர் மேக்தார் தனது தவறுக்கு வருந்தி அம்மாநிலத்தில் உள்ள போகர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். இதனையடுத்து, அவரை வரும் 23-ம் தேதி வரை போலீஸ் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com