ராஜஸ்தான்: திருமணத்திற்கு பின் வேறு ஒருவருடன் ஓடிய பெண்ணை கொன்ற தந்தை

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் திருமணத்திற்கு பின் கள்ளக் காதலனுடன் ஓடிய பெண்ணை கொன்ற தந்தை தலைமறைவாகினார்.
ராஜஸ்தான்: திருமணத்திற்கு பின் வேறு ஒருவருடன் ஓடிய பெண்ணை கொன்ற தந்தை
Published on

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான சாய்னா கன்வார் என்ற பெண், நாக்பூர் மாவட்டம் திட்வானா பகுதியைச் சேர்ந்த தேவேந்திர சிங் என்பவரை சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே சாய்னா தனது பழைய காதலனுடன் தலைமறைவாகிவிட்டார். இதனால் அவரது குடும்பத்தினர் அவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.

ஒரு ஆண்டுகளுக்கு மேலாக அவர் எங்கிருந்தார் என்பது பற்றி யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில், சென்ற புதன்கிழமை சாய்னாவை அவரது தந்தை பன்வார் சிங் ரானாலி பஸ் ஸ்டாண்டில் வைத்து பார்த்துள்ளார். அவர் மீது உள்ள கோபத்தில் அவரை தனக்கு சொந்தமான பாழடைந்த வீட்டிற்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொன்று விட்டு தலைமறைவாகினார்.

நேற்று அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் தகவல் அளித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com