சொகுசு கப்பலில் பயணம் செய்த போது கேலியாக சிரித்த மனைவியை கொன்ற கணவர்

சொசுகு கப்பலில் பயணம் செய்தபோது தன்னைப் பார்த்து தொடர்ந்து கேலியாக சிரித்துக்கொண்டிருந்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சொகுசு கப்பலில் பயணம் செய்த போது கேலியாக சிரித்த மனைவியை கொன்ற கணவர்
Published on

அலாஸ்கா:

அமெரிக்காவின் உத்தா மாநிலம் சான்டா கிளாராவை சேர்ந்தவர் கென்னத் மேன்சனார்ஸ் (45). இவரது மனைவி கிறிஸ்டி மேன்சனார்ஸ் (39).

இவர்கள் இருவரும் அலாஸ்காவுக்கு சொகுசு கப்பலில் பயணம் செய்தனர். கப்பலில் இவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட தனி அறையில் தங்கியிருந்தனர். அப்போது கென்னத்தை பார்த்து அவரது மனைவி கிறிஸ்டி கேலியாக சிரித்தார்.

அதைப் பார்த்த கென்னத் சிரிப்பை நிறுத்தும்படி கிறிஸ்டியிடம் பல முறை கூறினார். ஆனால் அவர் நிறுத்தாமல் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கென்னத் தனது மனைவி கிறிஸ்டியை சரமாரியாக அடித்தும் தலையை மோத வைத்தும் படுகொலை செய்தார். கையில் படிந்த ரத்தக்கறையுடன் அறையை விட்டு வெளியே வந்தார்.

அவர் அணிந்திருந்த ஆடையிலும் ரத்தம் தோய்ந்து கிடந்தது. அவரைப் பார்த்ததும் சக பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். அது குறித்து விசாரித்த போது தன்னை பார்த்து கேலியாக சிரித்ததால் ஆத்திரத்தில் அடித்து கொன்று விட்டதாக கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com