தேனி அருகே ஆசிரியர் பயிற்சி மாணவியை கடத்திய வாலிபர்

தேனி அருகே ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவியை கடத்திசென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி அருகே ஆசிரியர் பயிற்சி மாணவியை கடத்திய வாலிபர்
Published on

தேனி:

தேனி மாவட்டம் கம்பம் மாலையம்மாள்புரத்தை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் வைஷ்ணவி (வயது21). உத்தமபாளையத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது பெற்றோருடன் கோவிந்தம்பட்டியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் வைஷ்ணவியை அங்குள்ள தனது மற்றொரு மகள் வீட்டில் விட்டுவிட்டு பாண்டி வீட்டிற்கு வந்துவிட்டார்.

மறுநாள் வீட்டில் இருந்த வைஷ்ணவி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பாண்டி உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

தனது புகாரில் ஓடைப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவர்தான் கடத்தி சென்றிருக்க கூடும் என குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் கடத்தப்பட்ட மாணவியையும் அவரை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com