தானேவில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் போலீசார் முன் அடித்துக் கொலை

தானேவில் வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டதை நேரில் பார்த்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தானேவில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் போலீசார் முன் அடித்துக் கொலை
Published on

மராட்டிய மாநிலம் தானேவில் மனநலம் பாதிக்கபட்ட வாலிபர் அருகிலுள்ள கடைக்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மக்கள் அவரை தாக்கியுள்ளனர்.

28 வயதான அந்த வாலிபரை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மரத்தில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு இரும்பு மற்றும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இவை அனைத்தையும் போலீஸ் கான்ஸ்டபிள்ஸ் எச்.என்.காரூட் மற்றும் எஸ்.வி.கான்சேவ் ஆகிய இருவரும் நேரில் பார்த்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதன் அடிப்படையில் இரண்டு போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com