11 வயது சிறுமியை கற்பழித்த கொடூர தந்தை கைது

உத்தர பிரேதச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் சொந்த மகளையே கற்பழித்த கொடூர தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 வயது சிறுமியை கற்பழித்த கொடூர தந்தை கைது
Published on

லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் உள்ள ஆவுரங்காபாத் டப்பா என்ற கிராமத்தில் 11 வயது மகளை தந்தை கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சனிக்கிழமை அச்சிறுமி தனது தந்தையால் கற்பழிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அச்சிறுமி தனது உறவினர் மற்றும் கிராமத்தினரிடம் கூறியுள்ளார்.

அதை கேட்டு கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து சிறுமியின் தந்தை மீது போலீசில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து நேற்று இரவு அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும் இன்று சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என போலீஸ் கண்காணிப்பாளர் சுரேந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com